மாமியார் டார்ச்சர்.. இரு மகன்களை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை

2பார்த்தது
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், மாமியார் மற்றும் மனைவியின் தொல்லை தாங்க முடியாமல், கணவர் தனது 2 மகன்களை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தைச் சேர்ந்த பாவுலூரி காமராஜு என்பவர், தனது 2 மகன்களுக்கும் கூல்டிரிங்கில் விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்துள்ளார். அதன் பின்னர், அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: குமுதம்