திருநெல்வேலி மாவட்டம் தியாகராஜ நகரில், முத்துமாலை (35) என்ற பெண் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, இரு மர்ம நபர்களால் அப்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதற்கான காரணம் குறித்து கண்டறிய பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வகின்றனர். 5 வயது பெண் குழந்தையின் கண் முன்னே இரண்டு மர்ம நபர்கள் இந்த வெறிச்செயலை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.