உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தை சேர்ந்தவர்கள் விகாஸ்-ரூபி சவுத்ரி தம்பதி. இருவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்றும் (அக்.14) இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விகாஸ் தனது 11 வயது மகள் கண் முன்னே ரூபியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். இந்நிலையில், விகாஸ் மற்றும் ரூபி ஆகிய இருவர் மீதும் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.