மகன் உயிருடன் வர சடலத்துடன் 5 நாட்கள் பிரார்த்தனை செய்த தாய்

4887பார்த்தது
மகன் உயிருடன் வர சடலத்துடன் 5 நாட்கள் பிரார்த்தனை செய்த தாய்
மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் விதிஷா பகுதியில் மனதை உருக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 42 வயது பேஷன் டிசைனர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது தாய் 5 நாட்களாக மகனின் உடலருகே இருந்து பிரார்த்தனை செய்துள்ளார். மகன் மீண்டும் உயிருடன் திரும்புவார் என்ற நம்பிக்கையில், பிரார்த்தனை செய்ததாக கூறப்படுகிறது. வீட்டில் துர்நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதி பால் விநியோகஸ்தர் தகவல் அளித்ததால் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. பின்னர் அந்த தாயை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தொடர்புடைய செய்தி