மகாராஷ்டிரா: நவி மும்பையில் 10 வயது சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.2.5 லட்சத்துக்கு ஆசைப்பட்டு சிறுமியின் 30 வயதான தாயே இந்த கொடுமையை செய்துள்ளார். வெளிநாடு வாழ் இந்தியரான ஃபரூக் ஷேக் (70) என்பவர் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக நவி மும்பை காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற போலீசார் காம வெறிப்பிடித்த முதியவரையும், சிறுமியின் தாயையும் கைது செய்தனர். சிறுமியை போலீசார் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.