“தாய்மாமன் தங்க மோதிரம்” வழங்கும் திட்டத்தை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பதிலாக மதுரை அரசு மருத்துவமனையில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் இருந்து முதலமைச்சர் இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இடவசதி கருதி மதுரை அரசு மருத்துவமனையில் தொடங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.