கரூரில் இன்று (ஜூலை.10) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பேசிய முதலமைச்சர்
விஜய், “அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 முதல் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் செயல்படுத்தப்படும்” என அறிவித்தார். மேலும், “நான் ரீல் தாய்மாமன் இல்லை; ரியல் தாய்மாமன்” என்று கூறிய அவர், ஊழல், லஞ்சம் இல்லை என்று மக்கள் கூறியதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். “இப்போது பார்ப்பது வெறும் சாம்பிள்தான்; தவெகவின் விஸ்வரூபத்தை இனி வரும் நாட்களில் பார்ப்பீர்கள்” என்றும் கூறினார்.