ராணுவத்திற்கான செயற்கைக்கோள் சேவைகளை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்

3212பார்த்தது
ராணுவத்திற்கான செயற்கைக்கோள் சேவைகளை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்திய ராணுவத்திற்கான செயற்கைக்கோள் அடிப்படையிலான சேவைகளை மேம்படுத்துவதற்காகவும், பாதுகாப்புத் தகவல் தொடர்பு அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கிலும் இந்தியா மற்றொரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, டெல்லியிலுள்ள தலைமையக ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படை மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கீழ் ஆமதாபாத்தில் செயல்படும் விண்வெளிப் பயன்பாட்டு மையம் (எஸ்.ஏ.சி.) ஆகியவை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (எம்.ஓ.யு.) தயாரித்தது.