மதுரை பேரையூர் அருகே தொன்மையான 'ஓணான் கரடு' பகுதியில் கல்குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகளைப் பாதுகாக்க அரசு காட்டும் தீவிர அக்கறையை, இயற்கை வளங்கள் தொடர்பான வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்வதில் காட்டுவதில்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், "மதுக்கடைகளை விடவும் மலைகளே முக்கியம்" என்றும் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டினர்.