பாஜக பெண் நிர்வாகி அலிஷா அப்துல்லா அளித்த அவதூறு புகாரில் கைதான யூடியூபர் முக்தார் அஹமது மற்றும் திருச்சி
சூர்யா ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. தங்களைப் பற்றிச் சமூக வலைதளங்களில் இழிவாகப் பேசியதாக அலிஷா அளித்த புகாரில் இருவரும் கைது செய்யப்பட்டுச் சிறையிலிருந்தனர். இந்நிலையில், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாக இருவர் மீதும் குண்டாஸ் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.