சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக கொடி கம்பங்கள் மற்றும் பதாகைகள் அமைக்க இனிமேல் அனுமதி பெறுவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகள், மாநகராட்சியின் உரிய அனுமதியைப் பெற்ற பின்னரே கொடிக் கம்பங்களை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் சாலைகள் மற்றும் பொது இடங்களில் அமைக்கப்படும் கொடிக் கம்பங்கள் உடனடியாக அகற்றப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.