பாமக பொதுச் செயலாளராக முரளி சங்கர் நியமனம்

2210பார்த்தது
பாமக பொதுச் செயலாளராக முரளி சங்கர் நியமனம்
பாமக பொதுச் செயலாளராக முரளி சங்கரை, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நியமைத்துள்ளார். பாமக பொதுச் செயலாளராக வடிவேல் ராவணனை நீக்கிவிட்டு முரளி சங்கரை அறிவித்தார். முரளி சங்கருக்கு கட்சிப் பொறுப்பாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். தைலாபுரத்தில் புதிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், பாமகவில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.