ஹரியானாவின் ஜஜ்ஜார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கொலைவழக்கு கைதி மெயின்பால் தில்லா, தனது கம்போடிய இணையரைத் திருமணம் செய்துகொள்வதற்காக நீதிமன்றத்தின் சிறப்பு அனுமதியுடன் 12 மணி நேர பரோல் பெற்றார். சிறைக்கு அருகே பண்ணை வீட்டில் நடந்த திருமணத்தில் கலந்துகொண்ட அவர், நேற்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 2018-ல் போலி பாஸ்போர்ட்டுடன் தப்பி கம்போடியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட மெயின்பால், அங்கு மெட்டா சான் என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.