கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் டிஜிபி சந்தீப்ராய் ரத்தோய் நேரில் ஆய்வு நடத்தினார். சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் குற்றம் நடந்த கிணற்றின் அருகே காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிறுமியின் குடும்பத்தினர், பொதுமக்கள் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியுள்ளனர்.