கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் பேரூராட்சியில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய தமிழக அரசு மற்றும் காவல்துறையை முன்னாள்
பாஜக தலைவர்
அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
திமுக ஆட்சியில் நிலவிய பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழல் தற்போதும் தொடர்வது கவலைக்குரியது என்றும், முதலமைச்சர்
விஜய் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.