சத்தீஸ்கர் மாநிலத்தில், காதலனை கத்தியால் குத்தி கொலை செய்த காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். ரோஷினி சூர்யவன்ஷி (22) என்ற இளம்பெண், தனது செல்போன் நம்பரை பிளாக் செய்த காதலன் கம்தா பிரசாத்தை, வீடு தேடிச் சென்று மார்பில் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். தன்னை விட்டு வேறு பெண்ணுடன் பழகுவதாகக் கருதி ஆத்திரத்தில் காதலனை சரமாரியாக குத்திக் கொன்றதாக அப்பெண் கூறியுள்ளார். தொடர்ந்து, இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.