சுந்தர்.சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் இன்று (செப்.14) வெளியிட்டுள்ளனர். ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். ‘ரைஸ் ஆப் மஹாசக்தி’ எனும் பெயரில் வெளியாகியுள்ள இப்படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வரும் நவ.6-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது.