நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (47) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சமீபத்தில் அவர் உயிரிழந்தார். இந்நிலையில், தனது மனைவியின் மருத்துவத்திற்கு உதவிய தமிழக அரசுக்கும், முதலமைச்சர் விஜய்க்கும் நடிகர் முத்துக்காளை நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். மனைவியை இழந்து வாடும் தனக்கு உறுதுணையாக இருக்கும் நண்பர்கள், திரைத்துறையினர் அனைவருக்கும் நன்றி எனவும் உருக்கமாக பேசினார்.