லாட்ஜில் இளம்பெண் மர்ம மரணம்.. 2 இளைஞர்களிடம் விசாரணை

6560பார்த்தது
லாட்ஜில் இளம்பெண் மர்ம மரணம்.. 2 இளைஞர்களிடம் விசாரணை
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்பூரில் உள்ள லாட்ஜில் பெங்களூருவை சேர்ந்த 23 வயது இளம்பெண் வர்ஷா மர்மமான முறையில் உயிரிழந்தார். செப்.11ஆம் தேதி 2 இளைஞர்களுடன் லாட்ஜுக்கு வந்த அவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவருடன் வந்த 2 இளைஞர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என கூறப்படும் நிலையில், மரணத்திற்கான காரணத்தை அறிய உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி