மதுரை கப்பலூர் வாக்கு எண்ணும் மையத்தில் தவெகவினர் மீது அடையாளம் தெரியாத கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. கார் கண்ணாடிகளை உடைத்து, கட்டைகளை வீசித் தாக்கிய இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் தொகுதி வாக்குகள் இங்கு எண்ணப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.