தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூரில், முகமூடி அணிந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல் நடத்திய பயங்கர கத்திக்குத்துத் தாக்குதலில் 6 இளைஞர்கள் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்த வாகனங்கள், கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. நேற்று நடந்த திருமண விழாவில் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாகக் கூறி இதுவரை 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.