பூமியிலிருந்து 15,000 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள 'GPM J1839-10' என்ற மர்மப் பொருள், 1988 முதல் ஒவ்வொரு 22 நிமிடங்களுக்கும் ரேடியோ சிக்னல்களை அனுப்பி வருவதை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது அதீத காந்தப்புலம் கொண்ட 'மக்னெட்டார்' வகை நட்சத்திரமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பல தசாப்தங்களாகத் தொடர்ந்து சிக்னல்களை அனுப்பி வரும் இப்பொருள், விண்வெளி ஆய்வில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.