நேபாளத்தை சீர்குலைத்த பெருவெள்ளத்தின் பின்னணியில் சீனா ஏதோ ஒரு மர்ம ரகசியத்தை மறைப்பதாக சர்ச்சைகளும் சந்தேகங்களும் கிளம்பியுள்ளன. அருணாச்சலப் பிரதேச எல்லைக்கு அருகே சீனா கட்டி வரும் அணை, எதிர்காலத்தில் இந்தியாவிற்கும் இதேபோன்ற பேராபத்தை கொண்டு வருமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உருவெடுத்துள்ளது. கடந்த 1975-ம் ஆண்டில் ஒரே இரவில் பல அணைகள் உடைந்து லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிகழ்வை சீனா மறைத்தது போல, தற்போதும் உண்மைகளை மூடி மறைப்பதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்.