புதுச்சேரி விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி என தவெக தரப்பில் கூறப்பட்டிருந்தது. பாஸ் உடையவர்களுக்கு (QR Code) மட்டுமே அனுமதி எனக் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது திடலுக்கு வெளியே காத்திருந்த அனைவரும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அனைவரையும் உள்ளே விடக்கோரி தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கூறியதையடுத்து, அனைவரையும் போலீசார் அனுமதித்து வருகின்றனர்.