நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவு.. அண்ணாமலை இரங்கல்

8285பார்த்தது
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவு.. அண்ணாமலை இரங்கல்
நாகாலாந்து மாநில ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல.கனேசன் (80) உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஆக.15) காலமானார். அவருக்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “தமிழகத்தில், பாஜக வளர்ச்சிக்காகவும், தமிழக நலனுக்காகவும் கடுமையாக உழைத்தவர். அனைத்துத் தரப்பு மக்களிடமும் பரவலாக அறியப்பட்டவர். எளிமையான மனிதர். ஆழ்ந்த சிந்தனைவாதியாகத் திகழ்ந்தவர். இல. கணேசன் மறைவு, தமிழ்ச் சமூகத்துக்குப் பேரிழப்பு” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி