
பிப்ரவரி இறுதிவரை மேட்டூரில் தண்ணீர் திறக்க கோரிக்கை
நாகை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் குறுவை பாதிக்கப்பட்ட நிலையில், தாளடி சாகுபடியை 3000 ஏக்கரில் விவசாயிகள் மேற்கொண்டனர். மேட்டூரில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டதால், கருகும் பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் டீசல் மோட்டார் மூலம் தண்ணீரை இறைத்து வருகின்றனர். வயல்வெளிகளை ஒட்டிய நீர் நிலைகளில் போதுமான தண்ணீர் இல்லாததால், பிப்ரவரி இறுதி வரை மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி சிந்தாமணி வயல்வெளியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில், தண்ணீர் பற்றாக்குறையால் 40 நாள் தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து, உடனடியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


























