பெரிய தேர்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

158பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபராமபுரம் புனித செபஸ்தியார் ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று நடைபெற்றது. திருப்பூண்டி பங்குத்தந்தை பீட்டர் டேமியன் துரைராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மைக்கல்சம்மனசு, புனித அந்தோனியார், செபஸ்தியார் எழுந்தருளிய தேரை முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி