வேளாங்கண்ணி கடலில் குளித்த ஒருவர் மாயம்

0பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் கடலில் குளித்தபோது கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட கர்நாடக மாநில வாலிபர் நந்தன் (15) காணாமல் போனார். அவருடன் குளித்த நவீன் (26) மீட்கப்பட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோலார் மாவட்டத்திலிருந்து 50 பேர் கொண்ட சுற்றுலா குழு வேளாங்கண்ணிக்கு வந்திருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. வேளாங்கண்ணி தீயணைப்புத் துறையினர் காணாமல் போன நந்தனை தேடி வருகின்றனர். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி