நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே வடக்குப் பொய்கை நல்லூரில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில், நேற்று காலை 8 மணியளவில் மர்ம நபர் ஒருவர் அம்மன் கழுத்தில் இருந்த 8 கிராம் தங்க திருமாங்கல்யத்தை திருடிச் சென்றார். பூஜைக்காக வந்த அர்ச்சகர் திருமாங்கல்யம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆலய சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், மர்ம நபர் திருடுவதை உறுதி செய்தனர். கோயில் அறங்காவலர் புகாரின் பேரில், நாகப்பட்டினம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திருடனைத் தேடி வருகின்றனர். சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் பட்டப் பகலிலேயே இந்த துணிச்சலான திருட்டில் ஈடுபட்டுள்ளார்.