மகளிருக்கு ரூ.5000 வழங்கல் - பேரூராட்சி தலைவர் பாராட்டு

214பார்த்தது
மகளிருக்கு ரூ.5000 வழங்கல் - பேரூராட்சி தலைவர் பாராட்டு
கீழ்வேளூர் பேரூராட்சி தலைவர் இந்திராகாந்தி சேகர் வெளியிட்ட அறிக்கையில், முதலமைச்சர் மகளிருக்கு விடியல் பயணத்துடன் மாதம் ரூ.1000 வழங்கிய நிலையில், தற்போது மூன்று மாத தொகையுடன் கோடைகால தொகையாக ரூ.2000 சேர்த்து மொத்தம் ரூ.5000 வழங்கியது எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. வரும் தேர்தலிலும் கழகம் வெற்றி பெற்று நல்லாட்சியை தொடர்ந்திட மகளிர் சார்பாக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு நாகப்பட்டினம், கீழ்வேளூர் பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.