விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த கோரிக்கை!

145பார்த்தது
விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த கோரிக்கை!
நாகப்பட்டினத்தை சேர்ந்த விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட ஆட்சியர் ஆகாஷுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நாகை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தி 4 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதாகவும், ஜூன் மாதம் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் பாசன வாய்க்கால்கள் தூர் வாரப்படாமலும் பராமரிப்பு பணிகள் நடைபெறாமலும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறும் வகையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி