நாகப்பட்டினத்தில் இருந்து திருக்குவளை நோக்கிச் சென்ற அரசு நகரப் பேருந்து, கிராமத்து மேடு அருகே ஜல்ஜீவன் திட்டத்திற்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தின் சக்கரங்கள் பள்ளத்தில் புதைந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பயணிகள் பத்திரமாக இறங்கி பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இப்பகுதியில் ஜல்ஜீவன் திட்டத்திற்காக வெட்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் இருப்பதால், தொடர் மழையால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவதாகவும், பள்ளங்களை உடனடியாக மூட வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.