நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் 30,217.34 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட குறுவையில், 10.11.2025 வரை 30,094 ஹெக்டேர் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 123.34 ஹெக்டேர் அறுவடை மற்றும் நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம், 03.09.2025 முதல் 09.11.2025 வரை 123 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 1,19,953 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 26,213 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு, ரூபாய் 285 கோடியே 41 இலட்சத்து 30 ஆயிரத்து 392 ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.