நாகை மாவட்டத்தில் இன்று காலை முதல் கடுமையான பனி மூட்டம் நிலவி வருகிறது. கீழ்வேளூர், பட்டமங்கலம், தேவூர், வெண்மணி, கிள்ளுக்குடி, சாட்டியக்குடி, ஆதமங்கலம், வலிவலம், சுந்தரபாண்டியம், திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் பனிப்போர்வை போர்த்தியது போன்ற காட்சி காணப்படுகிறது. ஏற்கனவே மழை காரணமாக சம்பா சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது நிலவும் பனி மகசூலை மேலும் பாதிக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஊடுபயிரான உளுந்து, பச்சைப்பயிர்களும் பூக்கும் தருவாயில் பனியால் பாதிக்கப்படும் என அஞ்சுகின்றனர்.