நாகை வெளிப்பாளையம் அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பொது நிதியின் மூலம் 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக திருத்தேர் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய திருத்தேரின் வெள்ளோட்டம் இன்று காலை சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு நடைபெற்றது. தியாகராஜர் தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளிலும் தேர் சுற்றி வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து, 'ஆரூரா தியாகேசா' என கோஷமிட்டபடி சென்றனர்.