ஓஎன்ஜிசி பூமிக்கடியில் உப்பு நீர் குழாய் உடைந்த விவகாரம்

1பார்த்தது
நாகை மாவட்டம் நரிமணம் பகுதியில் பானுமதி என்ற விவசாயிக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில், 2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கச்சா எண்ணெய் எடுக்கும் பூமிக்கடியில் செல்லும் உப்புநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால், உப்புநீர் வயல் முழுவதும் பரவி பயிர்கள் கருகின. ஓஎன்ஜிசி நிறுவனம் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இழப்பீடு வழங்கியதோடு, மண்ணை அப்புறப்படுத்தி புதிய மண்ணை கொட்டியது. ஆனால், புதிய மண்ணின் தரம் மோசமாக இருந்ததால், கடந்த நான்கு ஆண்டுகளாக சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஓஎன்ஜிசிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், குழாய் உடைந்த 100 மீட்டர் தூரத்திற்கு விளைச்சல் குறைந்து நெற்கதிர்கள் கருகுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி