கீழையூர்: தாலிக்கு தங்கம் திட்டம் குறித்து ஓ.எஸ். மணியன் பேச்சு

299பார்த்தது
கீழையூர் கிழக்கு ஒன்றியத்தில் அதிமுக சார்பில் 200க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசுகையில், தாலிக்கு தங்கம் திட்டத்தை தற்போதைய அரசு நிறுத்திவிட்டதாகக் குற்றம் சாட்டினார். இத்திட்டம் நடைமுறையில் இருந்திருந்தால் பெண்களுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் கிடைத்திருக்கும். மகளிர் உரிமைத் தொகை என வெறும் ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு டாஸ்மாக் மூலம் அதை திரும்பப் பெறுவதாகவும் அவர் விமர்சித்தார். இது அத்தானிடம் பிடுங்கி அக்காவிடம் கொடுப்பது போல் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி