நாகை, வேளாங்கண்ணி மற்றும் வேட்டைக்காரனிருப்பு துணை மின் நிலையங்களில் நாளை (மே 30) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அங்கிருந்து மின்விநியோகம் பெறும் நாகை, திட்டச்சேரி, வேளாங்கண்ணி, சிக்கல், நாகூர், திருப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.