திருமருகலில் செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச் செயலாளர் பி. ஆர். பாண்டியன், அக்டோபர் மாத பெருமழையால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 10,000 ஏக்கர் நெல் பயிர்கள் சேதமடைந்ததாகக் கூறினார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், காப்பீடு செய்துள்ளவர்களுக்கு முழுமையான இழப்பீடு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், 2016-2021 மற்றும் 2021-2024 காலகட்டங்களில் வழங்கப்பட்ட காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஐஏஎஸ்ஸை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.