பொதுமக்களிடம் தேவைகள் குறித்து கருத்து கேட்பு கூட்டம்.

94பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்குவளையில், 'தமிழ்நாடு தலைகுனியாது' என்ற தலைப்பில் வர்த்தகர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் தேவைகள் குறித்து திமுக சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான கெளதமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில திமுக அயலக அணி செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எம். அப்துல்லா பங்கேற்று 300க்கும் மேற்பட்டோரின் கருத்துக்களை கேட்டறிந்தார். ஒன்றிய திமுக செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி