கீழ்வேளூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர் டி. லதா, நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த இல்லத்திற்கு இன்று வருகை தந்தார். அங்குள்ள கலைஞர் மற்றும் முரசொலி மாறன் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், தொகுதி மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என உறுதியளித்தார்.