அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சாலை மறியல்

1பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் தேமங்கலம் ஊராட்சியில், குறிப்பாக லிங்கத்தடி கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர், சாலை வசதி, பட்டா இல்லாததால் அரசு சலுகைகள் கிடைக்காமல் தவிப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் ராமர்மடம் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி