மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், நாகை நகராட்சியில் தூய்மைப் பணிக்காக புதிய ரோபோ இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா வரும் 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், நாகூர் தர்கா வாசலில் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ரோபோ இயந்திரம் மூலம் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றும் பணியைத் தொடங்கி வைத்தார். இந்த ரோபோ, கந்தூரி விழாவின் போது 10 நாட்களுக்கு தூய்மைப் பணியில் ஈடுபடும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.