நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அப்போலோ பவுண்டேசன், வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி, திருத்தல பேராலயம் இணைந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்காக ஒரு வாரம் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று (26-05-2026) நடைபெற்றது. பேராலய அதிபர் அருட்திரு.இருதய ராஜ் அடிகளார் முகாமை துவங்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா, துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், அப்போலோ முகாம் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் மற்றும் மருத்துவர்கள், பொதுமக்கள் இதில் பங்கேற்றனர்.