பயிரை சூழ்ந்து நிற்கும் மழை நீர் பயிர்கள் அழுகும் அபாயம்

0பார்த்தது
நாகை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வந்த கனமழையால் விவசாயிகள் பெரும் கலக்கமடைந்துள்ளனர். குறிப்பாக, வேதாரண்யம் வீ கேனல் மழைநீர் வடிகால் ஆற்றில் தூர்வாரும் பணி முறையாக மேற்கொள்ளப்படாததால், கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழப்பிடாகை, சிந்தாமணி, காரப்படாகை, சடையன்கோட்டகம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. ஏற்கனவே பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வடிய வைக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டிருந்த நிலையில், மீண்டும் பெய்த கனமழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி