நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக கலையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி கலந்துகொண்டு 447 மாணவ மாணவியருக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை வழங்கினார். புதுடெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக துணை இயக்குநர் முனைவர் ஜாய் கிருஷ்ணா ஜெனா முதன்மை விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு விழா பேருரையாற்றினார்.