திருக்குவளை தாலுகா முப்பத்திக்கோட்டகம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கண்கொடுத்த மாரியம்மன் கோவிலில் 21ஆம் ஆண்டு வைகாசி தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. மே 24ஆம் தேதி சக்தி கரகம் எடுத்தல் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கிய இந்த விழாவில், பக்தர்கள் விரதம் இருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மூலவர் ஸ்ரீ கண்கொடுத்த மாரியம்மனுடன், கணபதி, பாலமுருகன், அய்யனார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் வழிபாட்டில் உள்ளனர்.