வேளாங்கண்ணியில் அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் மீட்பு

1பார்த்தது
வேளாங்கண்ணியில் அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் மீட்பு
வேளாங்கண்ணி அருகே கிராமத்துமேடு சாலையில் உள்ள வயலில் 75 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவரின் சடலம் வாயில் நுரை தள்ளிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதேபோல், வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில் 70 வயது மதிக்கத்தக்க மற்றொரு முதியவரின் சடலமும் மீட்கப்பட்டது. இரண்டு சம்பவங்கள் குறித்தும் வேளாங்கண்ணி போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி