நாகை மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றியம் பிரதபராம புரம் ஊராட்சி மில்லடி தெருவில் வசிக்கும் திமுக உறுப்பினர் தாண்டவமூர்த்தி விபத்தில் இடது காலை இழந்து வறுமையில் உள்ளார். இதை அறிந்த கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், ஒன்றிய திமுகழகம் மற்றும் ஜான்சன் நினைவு அறக்கட்டளை சார்பில் அவருக்கு ரூ. 10,000 நிதி உதவி வழங்கினார். பேரூர் செயலாளர் மரிய சார்லஸ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் புகழேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.