இரவு 10. 00 முதல் காலை 06. 00 வரை ஒலிபெருக்கி பயன்படுத்த தடை

1பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கி, பொது ஒலிபரப்பு அமைப்பு, ஒலி எழுப்பும் கருவி, இசைக்கருவி அல்லது ஒலி பெருக்கியை பயன்படுத்தக்கூடாது என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார். பொது அவசரநிலை, அரங்குகள், மாநாட்டு அறைகள், சமுதாயக் கூடங்கள், விருந்து மண்டபங்கள் போன்ற மூடிய வளாகங்களுக்குள் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் நேரங்களைத் தவிர இந்த தடை பொருந்தும். பொது இடங்களின் ஒலி அளவு சுற்றுப்புற ஒலித் தரநிலைகளை விட 10 டெசிபல் அதிகமாகவோ அல்லது 75 டெசிபலாகவோ, இவற்றில் எது குறைவாக இருக்கிறதோ அந்த அளவை விட அதிகமாக இருக்கக்கூடாது. தனிப்பட்ட ஒலி அமைப்புகளும் குறிப்பிட்ட வரம்புக்குள் இருக்க வேண்டும். கலாச்சார அல்லது மத நிகழ்ச்சிகளுக்கு இரவு நேரங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த சார் ஆட்சியர் வருவாய் கோட்ட அலுவலரிடமிருந்து எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும்.
Job Suitcase

Jobs near you